எல்லாவிதப் பொருட்களுக்கும் மனிதர்களுக்கும் விளம்பரம் அல்லது ’இமேஜ்’ (Image) ஐ பொதுசனத் தொடர்பு சாதனங்கள் உருவாக்கி விடுகின்றன. அல்லது சம்பந்தப்பட்டவர்கள் பணத்தின் உதவியால் உருவாக்குகிறார்கள். கனடாவில் குறிப்பாக ரொறன்ரோவில் தமிழர்களுக்குள் குறிப்பிட்ட 4 அல்லது 5 பேரே அடிக்கடி இலவசப் பத்திரிகைகளில் முக்கியஸ்தர்களாக, பிரமுகர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றி அவற்றை வாசிக்கும் வாசகர்களே அறிவர். இங்கு வெகுசன ஊடகத்துறையை நடாத்தும் இரண்டொருவரை விட மற்றையோர் அனைவருமே எழுத்து, பத்திரிகைத்துறை, கல்வி என்பவற்றுடன் அங்கு தொடர்பில்லாதவர்கள். அவர்கள் அந்தத் துறையின் தர்மத்தை அறியாததால் இப்படித் தங்களுக்குத் தேவையானவர்களைத் திணிக்கின்றனர். ஆனால் இது எவ்வளவு தூரம் செல்லும்?
கிழக்கிலிருந்து வரும் விளம்பரமுடையவர்கள் இங்கு சொல்லிச்; செல்வது என்ன? அவர்களிடமிருந்து வந்த சொற்களை, வாக்கியங்களை எத்தனை பேர் முழுமையாக விளங்கி அதன்படி வாழ்க்கையை அமைத்து ஆனந்தமடைகிறார்கள்? ஒரு சிலர் அடுத்த முறை அவரின் வருகைக்காகக் காத்திருக்கலாம். அப்படிக் காத்திருக்கும்போது வாழவேண்டிய வாழ்க்கை ஒரு வருடத்தை வீணே கழிக்கிறார்களில்லையா? எமது பணி ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அதன் செய்திகளையும் முழுமையாக விளங்கி உணர்வதே! எமது பண்பாட்டு நெறிகள் பூரண மனிதத்துவத்தை வெளிப் படுத்துவதையொட்டி அமைந்திருந்தாலும் அவை எமது நாளாந்த வாழ்க்கையில் ஏற்படாததற்குக் காரணம் சுயசிந்தனையின்மையே.
வாழ்க்கை தரும் சந்தர்ப்பங்களை மற்றவர்களின் மூளையால்தான் நாம் அணுகி வந்திருக்கிறோம். இதிலிருந்து விடுபட சுயசிந்தனை அவசியம். கிளர்ச்சியு+ட்டுபவைகளே நமது கலாசாரம் என்றெண்ணித் திரிபவர்கள் அறியாமை உடையவர்கள். எமது கலாசாரம் என்பது சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால், எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று ஆன்மாவை அனுபவித்தலே! என்பதைச் சொன்னால், அவர்கள் நம்மை நகைப்புக்கிடமாக எண்ணலாம். எந்தக் கிளர்ச்சியு+ட்டும் வைபவங்கள், நிகழ்வுகளுக்குச் சென்றுவிட்டு வந்தாலும் தனிமையில் திருப்தி நிலவுகிறதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வருகிறது.
ஆன்மீகம் என்பது தனி ஒருவரைப் பரிணாம இறுதிக்கு உயர்த்திவிடும் அகநிலை அறிவியல். இங்குக் கூட்டங்களுக்கோ, அணிகளுக்கோ இடமில்லை. அப்படியிருக்குமானால் அது வியாபாரம். நாம் இங்கு வியாபாரம் செய்ய வில்லை. ஆகையால்தான் அறிவாலும் அனுபவத்தாலும் தெளிந்தவர்களை பரிணாமம் எம்மிடம் அனுப்புகிறது. எம்மை நாம் முன்னிலைப்படுத்துவதில்லை. வேத உண்மைகளை, ஞானத்தை அறிவியல் உதாரணங்களுடன் உள்ளங்களில் பதிப்பித்து வருகிறோம். உடனடியாக அதன் பயன் தெரியாவிட்டாலும் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அவை புரியும்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு புத்தர் இருக்கிறார். சிவன் இருக்கிறார். அவர்களை அடையாளம் காணச்செய்வதிலேயே எம்பணி தொடர்கிறது.
வெளி உலக வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் எண்ணம் உண்டு; முயற்சியும் உண்டு. என்றாலும் ஆயிரம் பேர் புறப்பட்டால் ஐந்து பேர்தான் வெற்றி பெறுகிறார்கள். ஏன்? எங்கே அவன் தடுத்து நிறுத்தப்பட்டான்? 100க்கு 90 பேர் முதல் புறக்கணிப்பிலேயே முனை முறிந்து போவார்கள்.
உலகத்தைப் பற்றிய புதிய உண்மைகளைக் கண்டு பிடித்தவர் கலிலியோ. கத்தோலிக்கத் திருச்சபை அதனைக் கண்டித்தது. கலிலியோவின் கண்டுபிடிப்பு கண்டது புறக்கணிப்பு; வென்றது அர்ப்பணிப்பு. திருக்குறளைச் சங்கப் புலவர்கள் புறக்கணித்தார்கள். கம்பன் கவிதையை அரங்கேற்ற முடியாதபடி தில்லை அந்தணர் புறக்கணித்தனர். திருஅரங்கத்து வைணவரும் கம்பனைப் புறக்கணித்தனர். மகாகவி பாரதியைத் தமிழுலகம் புறக்கணித்தது. புறக்கணிப்பைப் புறக்கணித்தே பாரதி வென்றார்.
முன்னேற்றப் பாதையில் 100 பேர் பயணப்பட்டால் முதல் புறக்கணிப்பிலேயே 90 பேர் நின்று விடுகிறார்கள். மீதி பத்துப் பேர்தான் பயணத்தைத் தொடர்கிறார்கள். ஆனால் முதல் புறக்கணிப்பை முறியடித்ததாலேயே 90மூ வெற்றி வந்து விட்டது. இந்த 90மூ, 10மூ என்கிற வெற்றி தோல்விக் கணக்கைக் கடந்தவர்கள் எல்லாருமே பெரிய மனிதர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். புறக்கணிப்பைத் தாங்கி வெல்ல அபாரமான தன்னம்பிக்கை வேண்டும். ஆனால் எமக்கோ உள்ளுயிராகவும் பிரபஞ்சமாகவும் விரிந்திருக்கும் பரமாத்ம நம்பிக்கையுண்டே!